ஆப்நகரம்

சசிகலா பெரிய தீமை, ஓ.பி.எஸ். சிறிய தீமை: தமிழருவி மணியன்

வி.கே.சசிகலா என்ற பெரிய தீமையைத் தவிர்க்க ஓ.பி.எஸ். என்ற சிறிய தீமையை ஏற்கலாம் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

TNN 12 Feb 2017, 7:55 pm
வி.கே.சசிகலா என்ற பெரிய தீமையைத் தவிர்க்க ஓ.பி.எஸ். என்ற சிறிய தீமையை ஏற்கலாம் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.
Samayam Tamil ops can be accepted to avoid sasikala says tamilaruvi manian
சசிகலா பெரிய தீமை, ஓ.பி.எஸ். சிறிய தீமை: தமிழருவி மணியன்

அதிமுக ஓ.பி.எஸ்.-சசிகலா ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக உடைந்துள்ளது. இதனால், முதல்வர் என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தங்கள் தரப்பைத் நேரில் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த பதில் அறிவிப்பும் வெளியாகவில்லை.

நாளுக்கு நாள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு வலுத்துக்கொண்டு வருகிறது. ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணியில் ஐக்கியமாகி வருவதால் சசிகலா அணி பலவீனமடைந்து வருகிறது. முதல்வர் நாற்காலியில் அமரத்துடிக்கும் வி.கே.சசிகலா, இரண்டாவது நாளாக கூவத்தூரில் அடைத்துவைத்துள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆலோசித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், ஓ.பன்னீர்செல்வத்தை புத்தர் என்று சொல்லிவிட முடியாது என்றார். மேலும், சசிகலா என்ற பெரிய தீமையைத் தவிர்க்க ஓ.பன்னீர்செல்வம் என்ற சிறிய தீமையை ஏற்கலாம் என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி