ஆப்நகரம்

பொங்கல் பரிசு இவர்களுக்கு கிடையாதா? அரசுக்கு ஓபிஎஸ் வைத்த புதிய கோரிக்கை!

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 29 Dec 2022, 12:32 pm
பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil ops


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2022 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

என்னுடைய வேண்டுகோள் முழுமையாக ஏற்கப்படவில்லை என்றாலும், 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில், இந்த பொங்கல் பரிசு தொகுப்பு என்பது அனைத்து அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்க்கரை அட்டை வைத்திருப்போரிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் தாய் உடல்நிலை: குஜராத் அரசு சொன்ன தகவல்!
இது மட்டுமல்லாமல், அரிசி கார்டு கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு கைபேசி மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான அரிசி கார்டு இன்னமும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்களால் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தத் தருணத்தில், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பும் தங்களுக்கு கிடைக்காதோ என்ற ஐயம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 83 ஆயிரத்து 756. மொத்தமுள்ள 2 கோடியே 21 இலட்சத்து 31 ஆயிரத்து 32 குடும்ப அட்டைகளில் சர்க்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை வெறும் 1.7 விழுக்காடுதான். இது தவிர, அரிசி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து கார்டு கிடைக்காதோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சம். ஆக மொத்தம், கிட்டத்தட்ட 4 இலட்சத்து 83 ஆயிரத்து 756 குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இலவச வேட்டி சேலை வருமா, வராதா? திமுக அரசுக்கு இபிஎஸ் எச்சரிக்கை?இந்தத் தருணத்தில், 2,356 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கோடியே 19 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் அரசு, சர்க்கரை கார்டு மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரிசி கார்டு கிடைக்காத 4% இலட்சம் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினால் அவர்களும் மிகுந்த மன நிறைவுடன் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமையும் ஏற்படாது. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சியடைவர்" எனக் குறிப்பிட்டுளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி