ஆப்நகரம்

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு: சென்னையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

TNN 18 Feb 2017, 9:50 am
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil ops supporters arrested in chennai due to tn assembly floor test
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிர்ப்பு: சென்னையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கைது


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு 11 மணியளவில் தொடங்க உள்ளது. அதற்காக கூவத்தூரில் தங்கிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், கார்கள் மூலம் சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எம்.எல்.ஏக்கள் வரும் கார்களை மறித்து, கோஷங்கள் எழுப்பவும் முயற்சி செய்தனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து, அழைத்துச் சென்றனர்.

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் வந்து சேர்வர் என்று கூறப்படுகிறது. முன்னதாக முதலமைச்சர் பழனிச்சாமி சட்டமன்றம் வந்து சேர்ந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களும் சற்று முன், சட்டமன்றம் வந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

OPS supporters arrested in Chennai due to TN Assembly floor test.

அடுத்த செய்தி