ஆப்நகரம்

சசிகலா ஆதரவாளர்கள் தொகுதிகளை குறிவைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி

சசிகலா ஆதரவாளர்கள் தொகுதிகளை குறிவைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி நடத்துகின்றனர்.

TNN 17 Feb 2017, 12:26 pm
சென்னை: சசிகலா ஆதரவாளர்கள் தொகுதிகளை குறிவைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி நடத்துகின்றனர்.
Samayam Tamil ops supporters protest in sasikala support mlas constituencies today
சசிகலா ஆதரவாளர்கள் தொகுதிகளை குறிவைத்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேரணி


தமிழகத்தில் தொடர்ந்து அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது முதலமைச்சர் கனவு பறிபோனது. இதையடுத்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான எடப்பாடி கே.பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக மாற்றினார். அவர் ஆளுநரிடம் உரிமை கோரி, புதிய அமைச்சரவை உடன் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கு சென்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க வலியுறுத்தும் வகையில், அவர்கள் சார்ந்திருக்கும் தொகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார். தானும் களத்தில் இறங்கி, மக்களின் ஆதரவை பெறப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பேரணி செல்வதாக வந்த தகவலால் மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து கைது செய்யப்பட்டார்.

OPS supporters protest in Sasikala support MLA's constituencies today.

அடுத்த செய்தி