ஆப்நகரம்

ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக 6000 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்..!

ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக 6000 அதிமுக நிர்வாகிகள், இந்திய தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

TNN 20 Mar 2017, 5:59 pm
ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக 6000 அதிமுக நிர்வாகிகள், இந்திய தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil ops team submitted 6000 affidavits to indian election commision
ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக 6000 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்..!


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுக இரண்டு அணியாக உடைந்தது. தற்போது இந்த இரு அணிகளும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் தாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும், எனவே இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த விசாரணை வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 6000 பேர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த பிரமாண பத்திரங்கள் மாவட்ட வாரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தங்கள் அணிக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களாக உள்ள 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்யப்போவதாகும் ஓ.பி.எஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். மேலும் 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாவட்டம் தோறும் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக தீர்மானம் இயற்றி,அந்த தீர்மானத்தின் நகலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளனர். அந்த பிரமாண பத்திரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களும் கையெழுத்து இட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் குறித்து முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோரிடையே சர்ச்சை ஏற்பட்டது. அப்போது அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக, அக்கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இந்த பிரமாண பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையமும் பரிசீலித்தது.

தங்கள் அணிக்கு கட்சியின் தொண்டர்களிடையே பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை அறிவிக்கும் நடைமுறையே இந்த பிரமாண பத்திர நடைமுறை. இவை தேர்தல் ஆணையத்தால் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமே தவிர, இறுதி முடிவு எடுப்பதில் பெரும் பங்கு வகிக்காது.

OPS team submitted 6000 Affidavits to Indian election commision

அடுத்த செய்தி