ஆப்நகரம்

வெளிமாநிலத்தவர்க்கு தமிழக அரசுப் பணியா? டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது!

தமிழக அரசுப் பணியில் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வெளிமாநிலத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNN 13 Dec 2017, 10:48 am
சென்னை: தமிழக அரசுப் பணியில் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வெளிமாநிலத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil other state people protest for govt jobs in tnpsc head office
வெளிமாநிலத்தவர்க்கு தமிழக அரசுப் பணியா? டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது!


தமிழக அரசுப் பணிகளில் சேர டி.என்.பி.எஸ்.சி சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களும் தமிழக அரசுப் பணியில் சேரும் வகையில், டி.என்.பி.எஸ்.சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு அக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.

இவர்கள் கோட்டை ரயில்வே நடைமேம்பாலம் அருகில் இருந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர்.

இதையடுத்து பேசிய வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆந்திரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே, அரசுப் பணியில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை? தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90% பணிகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசு பணியில் சேர வயது உச்சவரம்பை 35-ல் இருந்து 40-ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Other State People protest for Govt jobs in TNPSC Head Office.

அடுத்த செய்தி