ஆப்நகரம்

நமது எம்.ஜி.ஆர். ஊழியர்கள் விரட்டியடிப்பு! நடவடிக்கை எடுக்க தினகரன் கோரிக்கை!

நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

TNN & Agencies 11 Dec 2017, 11:36 pm
சென்னை: நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil our mgr employees dismissed vivek is threatening will dinakaran take action
நமது எம்.ஜி.ஆர். ஊழியர்கள் விரட்டியடிப்பு! நடவடிக்கை எடுக்க தினகரன் கோரிக்கை!


அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழாக விளங்கியது நமது எம்.ஜி.ஆர். ஜெயா டி.வியும், இந்த நாளிதழும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானவை.

அ.தி.மு.க. கட்சி பெயரும், சின்னமும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். அணியினருக்கு சென்ற பின் சசிகலாவின் குடும்பத்தினரே தொடர்ந்து ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். ஆகியவற்றை நிர்வகித்து வந்தனர். நமது எம்.ஜி.ஆர். நாளிதழை கைப்பற்றப்போவதாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். அணியினர் அறிவித்தனர்.

இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர். அச்சகத்தில் கடந்த இருபது வருஷங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த 35 ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய தயாரானார்கள்.

இதுகுறித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கூறுகையில்,’ பல ஆண்டுகள் நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்துக்காக உழைத்தோம். ஆனால் 35 ஊழியர்களை திடீரென நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளது . கடந்த மாத சம்பளமும் தரவில்லை. நிர்வாகி விவேக்கிடம் இதுகுறித்து பேச முயன்றோம். அவர் பேச்சுவார்த்தையை தவிரத்தார்.

இந்த நிலையில் இன்று ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்ய தயாரானோம். பேச்சுவார்த்தை நடத்த தனது ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்துக்கு அழைத்தார் விவேக். அதை நம்பிச் சென்றோம். ஆனால் அங்கு விவேக் எங்களை கடுமையாக மிரட்டினார். தற்போது செய்வதறியாது நிற்கிறோம்” என்றார்.

our mgr employees dismissed vivek is threatening will dinakaran take action

அடுத்த செய்தி