ஆப்நகரம்

வேதாரண்யம் அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை: 14 பேர் காயம்!

வேதாண்யம் அருகே இன்று அதிகாலை இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 14 பேர் காயமடைந்தனர்.

Samayam Tamil 19 Apr 2019, 3:06 pm
வேதாண்யம் அருகே இன்று அதிகாலை இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 14 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil வேதாரண்யம் அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை: 14 பேர் காயம்!
வேதாரண்யம் அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை: 14 பேர் காயம்!


உள்கர்நாடகா முதல் குமரி வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துவருகிறது., நேற்று இரவு கோவை, சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பமும் கடுமையாக இருக்கும். அதேசமயம், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, திருத்தணி, வேலூர், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, சேலத்தில் 105 டிகிரி, திருச்சி மற்றும் தருமபுரியில் 104 டிகிரி, தஞ்சாவூர், கோவை, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி