ஆப்நகரம்

காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க நடவடிக்கை : எடப்பாடி !

தேனி மலையில் காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Samayam Tamil 12 Mar 2018, 4:50 am
தேனி மலையில் காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில், நேற்று நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்காக சென்ற மாணவர்கள், காட்டுத்தீயில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil over 30 caught in huge forest fire in tamil nadu air force called in
காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க நடவடிக்கை : எடப்பாடி !



அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் ஹெலிகாப்டர் உதவி கேட்டுள்ளோம். மேலும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை உடனடியாக அப்பகுதிக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து மாணவர்களை பத்திரமாக மீட்க உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து விசாரித்து, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிககை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Thirty-six people, mostly students, were caught in a massive forest fire in Theni district of Tamil Nadu on Sunday evening. 10 people have been rescued and taken to the hospital in Bodinaickanur. Sources say 10-12 people may have suffered burn injuries.

அடுத்த செய்தி