ஆப்நகரம்

திருச்சி முக்கொம்பு அணை உடைப்பை சீரமைக்கும் பணியில் 600 தொழிலாளர்கள் தீவிரம்

முக்கொம்பு அணை உடைந்த இடத்தில் 600 தொழிலாளர்கள் அதை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 27 Aug 2018, 5:07 pm
திருச்சி : முக்கொம்பு அணை உடைந்த இடத்தில் 600 தொழிலாளர்கள் அதை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil mukkombu dam repair


திருச்சி மாவட்டத்தில், காவேரி ஆற்றுக்கிடையே 1836ம் ஆண்டு முக்கொம்பு தடுப்பணை 45 மதகுகளுடன் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக இருந்த இந்த அணை, கடந்த 22ம் தேதி 6லிருந்து 14 வரையிலான தடுப்பு மதகுகள் உடைந்தன. தொடர்ந்து மதங்குகளை தாங்கி நின்ற தூன்களும் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தற்போது சீரமைப்பு பணிகள் நடைப்பெறுவதால், காவேரி நீரை கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து விடப்படுகின்றனர்.

அதே போல் கொள்ளிடத்திலும் நீர் திறந்துவிடும் மதகுகள் உ டைந்தன. இதனை கடந்த 24ம் தேதி முதல்வர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு, 95 லட்சம் செலவில் உடைப்பை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மொத்தம் உள்ள 650 மீட்டர் பாலத்தில் 102 மீட்டர் வரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை சரி செய்யும் வகையில், பணிகள் மேற்கொள்ள 2 லட்சம் மணல் மூட்டைகள் தடுப்பாக அமைக்க 650 தொழிலாளர்கள் இரவு பகலாக தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி