ஆப்நகரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பு!?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பு!?

TOI Contributor 20 Mar 2017, 6:31 pm
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil p chidambaram will be appointed as tamilnadu congress committee chief
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பு!?


தமிழக காங்கிரஸ் கமிட்டியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. ஈவிகேஎஸ் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கமிட்டி பதவியில் இருந்து நீக்கவிட்டு திருநாவுக்கரசரை நியமித்ததில் இருந்தே சர்ச்சை அதிகமானது. இளங்கோவன் தரப்பினர் தொடர்ந்து திருநாவுக்கரசரை எதிர்த்து வந்தனர். அதிமுகவுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்படுகிறார் என்று இளங்கோவன் குற்றம் சாட்டினார். இதனைத்தொடர்ந்து திருநாவுக்கரசரை மாற்றும் முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்ததாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமிப்பதற்கு முன்னர் ப.சிதம்பரத்தை நியமிக்க மேலிடம் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து திருநாவுக்கரசருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசியலில் பெரும் குழப்பம் நிலவுவதால் மாநில அரசியலில் கவனம் செலுத்த ப.சிதம்பரம் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விரைவில் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்பதற்கு ப.சிதம்பரம் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி