ஆப்நகரம்

சர்ச்சைக்குள்ளான பழனி அபிஷேகமூர்த்தி சிலை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழனி கோயிலில் உள்ள சர்ச்சைக்குள்ளான அபிஷேகமூர்த்தி சிலையை கையகப்படுத்த உள்ள சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் அதனை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.

Samayam Tamil 10 Jul 2018, 11:57 am
பழனி கோயிலில் உள்ள சர்ச்சைக்குள்ளான அபிஷேகமூர்த்தி சிலையை கையகப்படுத்த உள்ள சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் அதனை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.
Samayam Tamil Statue
சர்ச்சைக்குள்ளான பழனி அபிஷேகமூர்த்தி சிலை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!


பழனி தண்டாயுபாத கோயிலில், 2004-ம் ஆண்டு 220 கிலோ எடையில் செய்யப்பட்ட ஐம்பொன்னால் ஆன அபிஷேக மூர்த்தி சிலை வைக்கப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த சிலை அகற்றப்பட்டு, தனி அறைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் சிலை தயாரிப்பில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போதைய கோயில் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை, ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கில் நடத்தப்பட்ட பல கட்ட விசாரணையை தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலை செய்யப்பட்ட காலத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான பழனி மலைக்கோயிலின் அபிஷேகமூர்த்தி சிலையை, கையகப்படுத்த சிலைக்கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி ராஜாராம் தலைமையிலான போலீசார், பழனி தாசில்தார் முன்னிலையில் அபிஷேகமூர்த்தி சிலையை கையகப்படுத்தி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி