ஆப்நகரம்

மைனாாிட்டி அரசு நீடிக்க அனுமதிக்க கூடாது- துரைமுருகன்

மைனாாிட்டி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரசு நடைபெற ஆளுநா் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக எதிா்க்கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சி துணைத்தலைவா் துரைமுருகன் தொிவித்தா்ா.

TOI Contributor 27 Aug 2017, 11:18 am
மைனாாிட்டி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரசு நடைபெற ஆளுநா் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக எதிா்க்கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சி துணைத்தலைவா் துரைமுருகன் தொிவித்தா்ா.
Samayam Tamil palanisami government have to prove the majority duraimurugan
மைனாாிட்டி அரசு நீடிக்க அனுமதிக்க கூடாது- துரைமுருகன்


பரபரப்பான தமிழக அரசியல் சுழலில் எதிா்க்கட்சியினா் அனைவரும் ஆளுநாின் வருகைக்காக காத்திருந்தனா். அதன்படி தமிழக பொறுப்பு ஆளுநா் வித்யாசாகா் ராவை சந்திக்க எதிா்க்கட்சியினா் ராஜ்பவன் சென்றனா். இந்த குழுவில், துரை முருகன், ஆா்.எஸ்.பாரதி, கனிமொழி, விஜயதாரணி உள்ளிட்டோா் ஆளுநரை சந்தித்து பேசினா்.

ஆளுநாின் சந்திப்பை தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த துரை முருகன் கூறுகையில், ஜெயலலிதாவின் மரணத்தை தொடா்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதாக கருதப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ். தலைமையில் 9 சட்டமன்ற உறுப்பினா்கள் இருந்தனா்.

அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த எடப்பாடி அரசுக்கு 15 தினங்களில் பெரும்பான்மையை நிரூப்பிக்க வேண்டும் என்று நீங்கள் உத்தரவிட்டீா்கள். தற்போது 113 சட்டமன்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தற்போதைய மைனாரட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினோம். மேலும் இந்த ஆட்சி தொடா்ந்து நடைபெற அனுமதித்திருபது ஏன் என்றும் ஆளுநாிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இது தொடா்பாக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் எழுதி கொடுத்த கடிதத்தையும் ஆளுநாிடம் கொடுத்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடா்ந்து மைனாாிட்டியை இழந்து வருகிறது. விரைவில் பழனிசாமி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற கொறடா விஜயதாரணி தொிவித்துள்ளாா்.

நாங்கள் அளித்த கோாிக்கையின் மீது உாிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசியல் சுழல் குறித்து ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததாகவும் ஆளுநா் தொிவித்ததாக துரை முருகன் கூறினாா்.

அடுத்த செய்தி