ஆப்நகரம்

பாலாறு தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர பேருந்து முற்றுகை

ஆந்திர அரசால் பாலாறுக்கு நடுவே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் லீக் அமைப்பினர் ஆந்திர மாநில பேருந்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

TOI Contributor 24 Aug 2016, 8:19 pm
வேலூர் : ஆந்திர அரசால் பாலாறுக்கு நடுவே தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் லீக் அமைப்பினர் ஆந்திர மாநில பேருந்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil palar check dam issue muslim league cadre held for laying siege to apsrtc bus
பாலாறு தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர பேருந்து முற்றுகை


பாலாறுக்கு குறுக்கே ஆந்திர அரசால் கட்டப்படும் தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துமாறு ஜூலை 1ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார். இருப்பினும் தொடர்ந்து கட்டுமானம் நடைபெற்று வருவதை கண்டித்து இன்று முஸ்லீம் லீக் அமைப்பை சேர்ந்தோர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில், வேலூர் - திரூப்பதி செல்லும் ஆந்திர மாநில பேருந்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராகவும், ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கம் எழுப்பபட்டது.

இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

அடுத்த செய்தி