ஆப்நகரம்

ராமேஸ்வரம் ரயில் இஞ்சினில் தீ..! நடு வழியில் தவித்த பயணிகள்...

ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு ஆபத்து நேராமல் தவிர்க்கப்பட்டது.

Samayam Tamil 18 Jan 2020, 6:41 pm
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, இன்று மாலை 4 மணிக்கு திருப்பதி விரைவு ரயில் புறப்பட்ட சென்றது. இதில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது இன்ஜினில் உள்ள கண்டன்சரில் திடீரென தீ பற்றியது.
Samayam Tamil ராமேஸ்வரம் ரயில் இஞ்சினில் தீ


இதனையடுத்து ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் சம்பவத்தை அறியாத பயணிகள் குழம்பினர். பின்னர் தீ பற்றியதை குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் கூச்சலிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் இன்ஜினில் பற்றிய தீயை அனைத்த பின் 45 நிமிட காலதாமத்துடன் இரயில் புறப்பட்டுச்சென்றது.

தாய், குழந்தைகளை தாக்காமல் தாண்டி சென்ற காளை..! சிராவயல் மஞ்சுவிரட்டில் சிலிர்ப்பான தருணம்...

தீ பற்றியதை ஓட்டுநர் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

கூடுதல் தகவல்:

திமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இல்லை: இரு கட்சித் தலைவர்கள் உறுதி!

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகளின் போக்குவரத்தை இலகுவாக்க ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயிலின் சேவையை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவில்லாத குறைந்த கட்டண சேவையாகும்.

அடுத்த செய்தி