ஆப்நகரம்

பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் – அருண் ஜெட்லி

பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சா் அருண் ஜெட்லி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Jan 2018, 9:30 pm
பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சா் அருண் ஜெட்லி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil parliament assembly election at the same time said arun jaitley
பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் – அருண் ஜெட்லி

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில் மோடி அரசுக்கு முந்தைய ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் இருந்தவா்கள் எதற்கும் உதவாத அரசாக இருந்து வந்தது. நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் மட்டுமே. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.

ரூபாய் நோட்டு வாபஸ் ஊழலை ஒழிக்க மிகுந்த கனத்த மனநிலையில் எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளத. செலவினங்களை குறைக்கும் விதமாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மோடியின் முக்கிய முடிவுகளால் நாடு காப்பாற்றப்பட்டுள்ளது என்று அவா் தொிவித்துள்ளா்ா.

அடுத்த செய்தி