ஆப்நகரம்

சசிகலாவை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 5 Feb 2017, 4:45 pm
சென்னை: தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளதை அடுத்து, அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil party members outside aiadmk hq say were very happy
சசிகலாவை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், அக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து வரும் 7 அல்லது 9ஆம் தேதி, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து எம்.எல்.ஏக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை தமிழக அரசு பின்பற்றும் என்றும், அதிமுக அரசு மக்களின் நலனுக்காக செயல்படும் என்று சசிகலா உறுதியளித்தார். இதற்கிடையில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வழியை சசிகலா நிச்சயம் பின்பற்றுவார் என்றும், தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Party members outside AIADMK HQ say we're very happy & hope that Sasikala Natarjan becomes CM as she'll follow Jayalalithaa's steps.

அடுத்த செய்தி