ஆப்நகரம்

தே.மு.தி.க., தோல்விக்கு யார் காரணம்? பிரேமலதா, சுதீஷ் மீது கட்சியினர் கடுப்பு

சட்டசபை தேர்தலை தொடர்ந்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதி தேர்தலிலும் தேமுதிக படு தோல்வியை சந்தித்துள்ளது.

TNN 27 Nov 2016, 8:19 am
சட்டசபை தேர்தலை தொடர்ந்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதி தேர்தலிலும் தேமுதிக படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு பிரேமலதா, சுதிஷ் தான் காரணம் என தொண்டர்கள் கடுப்பில் உள்ளனர்.
Samayam Tamil party members sad for dmdk lose in byelection
தே.மு.தி.க., தோல்விக்கு யார் காரணம்? பிரேமலதா, சுதீஷ் மீது கட்சியினர் கடுப்பு


கட்சி என்றால் வெற்றி தோல்வி சகஜம், ஆனால் 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாமல் வெறும் 2% ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது பாஜக.,வுக்கு அடுத்ததாக தேமுதிக., தள்ளப்பட்டுள்ளது.

இந்த மூன்று தொகுதி தேர்தலுக்காக கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அவரது மைத்துனர் சுதிஷ் பிரச்சாரம் செய்தனர். இருப்பினும் தேல்லிவியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.

இந்த தோல்வி குறித்து தொண்டர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் தெரிவித்து வருகின்றனர். தோல்விக்கு பிரேமலதா, சுதிஷ் தான் காரணம் எனவும் கூறிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: 'இந்த தோல்வியை நினைக்கும் போது மனம் குமுறுகிறது; நெஞ்சம் பதைக்கிறது.இதற்கெல்லாம் என்ன காரணம்' என, கேள்வி தொடுத்துள்ளார். இதற்கு பலரும் பிரேமலதா, சுதிஷ் தான் என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதோடு சுதிஷிடம் உள்ள இளைஞர் அணி செயலர் பதவியை, சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவரிடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இதுபோன்ற பதிவுகளை விஜயகாந்தின் வலைதளத்திலும் பதிவிட்டிருந்தனர். ஆனால் அவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி