ஆப்நகரம்

அசத்தும் தேமுதிக - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தேதி அறிவித்த விஜயகாந்த்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்ப மனு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Nov 2019, 1:27 pm
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதிபட பேசியுள்ளார்.
Samayam Tamil Vijayakanth


எனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வலுப்படுத்துவதே சரியானதாக இருக்கும்.

ஐஐடி தற்கொலைகள்...சென்னை முதலிடம்; அதிர்ச்சியை கிளப்பும் புள்ளி விவரங்கள்!

எனவே உள்ளாட்சி தேர்தலில் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுவது அவசியம். தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. இதில் திமுக பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் துவண்டு போன அதிமுகவிற்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் டானிக் கொடுத்தது போல் புத்துயிர் ஊட்டியுள்ளது.

சென்னை ஐஐடி மாணவி தற்கொலையின் அதிர்ச்சி பின்னணி; விசாரணையில் இறங்கிய கமிஷனர்!

அதே உற்சாகத்துடன் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் அதிமுக களமிறங்குகிறது. உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு விநியோகிக்கும் அறிவிப்பை அதிமுக, திமுக கட்சிகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் தேமுதிக நாளை முதல் விருப்ப மனு விநியோகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதனை வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

மேயர் பதவிக்கு ரூ.15,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000, நகராட்சி தலைவர் ரூ.7,000, நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1,500, பேரூராட்சி தலைவர் ரூ.4,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1,000 ஆகும்.

கர்நாடகா கட்டும் அணைக்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம்!

மேலும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரூ.2,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி