ஆப்நகரம்

பழனி கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில் இயங்கி வரும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

TNN 31 Jan 2017, 11:06 am
பழனி: பழனி முருகன் கோவிலில் இயங்கி வரும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pazhani rope car ride has been temporarily stopped for maintainance
பழனி கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்


பழனி மலைக்கோவிலுக்கு இரண்டு நிமிடங்களில் கீழ் தளத்திலிருந்து ரோப்கார் மூலம் செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ரோப்காரை பயன்படுத்துகின்றனர்.

ரோப்கார் பராமரிப்பு பணிக்காக ஆண்டிற்கு ஒரு மாதமும், மாதத்தில் ஒரு நாளும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், வருகிற பிப்.9ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 'தைப்பூச திருவிழா' காரணமாக ரோப்கார் பராமரிப்பு பணி இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

இதனால், ரோப்கார் இயங்காது என்றும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் வழியாக மலைக்கோவில் செல்லுமாறும், பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை தொடங்கும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி