ஆப்நகரம்

செல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர் - லதா ரஜினிகாந்த்

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2019, 4:38 pm
செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil LATHA rajnikanth


சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்தார்.

சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் எனக் கூறிய லதா ரஜினிகாந்த், கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். குழந்தைகளை வட மாநிலங்களில் பெற்றோர்களே விற்கும் அவலம் நடந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி