ஆப்நகரம்

சேலத்தில் கடும் கட்டுப்பாடு..! மக்கள் 5 நாட்களுக்கு ஒரு தடவை தான் வெளியே வர வேண்டும்...

சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவர்.

Samayam Tamil 9 Apr 2020, 2:16 pm
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் தமிழ்நாடு நாட்டிலேயே இரண்டாம் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஊரடங்கு வரும் 14ம் தேதி வரையில் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அதனை மேலும் நீட்டிக்க ஆலோசனைகளும் நடந்து வருகின்றன.
Samayam Tamil சேலத்தில் கடும் கட்டுப்பாடு


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிமுறைகள் தீவிரமாக வருகின்றன. அதன்படி சேலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவர் என காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க செல்லும் இருசக்கர வாகனங்களை வண்ணங்கள் மூலம் காவல்துறையினர் அடையாள படுத்தி வருகின்றனர்.



அதன் ஆரம்பமாக சேலம் 5 ரோடு பகுதியில் இன்று இரு சக்கர வாகனஙக்ளில் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மஞ்சள் நிற வண்ணம் கொண்டு அடையாளப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி