ஆப்நகரம்

விமான நிலையங்களில் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்துக: தயாநிதி மாறன் வலியுறுத்தல்

விமான நிலையங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே பணியமர்த்த வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 10 Aug 2020, 2:46 pm
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியிடம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியான மத்திய தொழிலக படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப் - CISF) ஒருவர் ஹிந்தியில் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், கனிமொழி தனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ்தான் தெரியும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியர் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, இந்தியராக இருப்பது ஹிந்தி பேசுவதற்குச் சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது என எனக்குத் தெரியவில்லை. ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா. ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர்கள் என்ற முடிவுக்கு எப்போது வந்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, கனிமொழியிடம் ஹிந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக எதுவும் கேட்கப்படுவதில்லை எனவும் சிஐஎஸ்எஃப் விளக்கமளித்துள்ளது.

EIA2020: இது வரைவுதான்... மாற்றங்கள் செய்யப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

இந்த நிலையில், அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி