ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோாி தா்ணா

கிருஷ்ணகிரி மாவட்டம் கூனம்பட்டி கிராமத்தில் அரசு வழங்கிய பசுமை வீட்டில் நடத்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனா்.

Samayam Tamil 18 Feb 2019, 11:31 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் கூனம்பட்டி கிராமத்தில் அரசு வழங்கிய பசுமை வீட்டில் நடத்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனா்.
Samayam Tamil Alcohol drinking


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூனம்பட்டி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீட்டை டாஸ்மாக் கடை அமைக்க 5000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அரசு வழங்கிய இந்த வீட்டில் நடைபெறும் டாஸ்மாக் கடையால் அந்த வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மது குடிப்பவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டு கூட்டம் சேர்வதால் பெண்கள் அச்சபடுவதாகவும் ஆகவே இந்த கடையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் என்பவர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அனைவரையும் மனு அளிக்க உள்ளே அனுமதிக்க முடியாது என காவல்துறை தெரிவித்ததை அடுத்து அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இவர்கள் மனுவை ஏற்றுக்கொண்டு கூனம்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட்டார். இதனை அடுத்து தங்களது மனு மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து தர்னா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி