ஆப்நகரம்

இந்த மாவட்ட மக்கள் ரொம்ப பாவம்; நிலத்தடி நீர் மட்டத்தில் இப்படியொரு சோகம்!

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிக மோசமான நிலையில் இருக்கிறது.

Samayam Tamil 19 Jun 2019, 6:00 pm
தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நீர் நிலைகளை முறையாக தூர்வாராதது, ஆக்கிரமிப்புகளை அகற்றாதது, மழை நீரை சேகரிக்காதது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil Ground Water


தற்போதைய சூழலில் பொதுமக்கள் காலிக் குடங்களை தூக்கிக் கொண்டு, தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலிலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்படுவது, பொதுமக்களை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 52 அடிக்கு சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அம்மாவட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. தினசரி 100 முதல் 104 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்ட சூழலில், அனைவரும் நிலத்தடி நீரை நோக்கி கவனத்தை திசை திருப்பி உள்ளனர். தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், நிலத்தடி நீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது.

இந்த மாவட்டத்திலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. எனவே பொதுமக்கள் மரக் கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக ஏரி, குளம், குட்டைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்தால் தான், அடுத்து வரும் பருவமழையின் போது போதிய நீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி