ஆப்நகரம்

பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Samayam Tamil 22 Mar 2019, 11:10 pm
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Perarivalan in jail.


முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனா். இவா்கள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநா் தொடா்ந்து மௌனம் காத்து வருகிறாா். இந்நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளும் 7 போ் விடுதலையை தங்கள் தோ்தல் அறிக்கையிலேயே இடம் பெறச் செய்துள்ளனா்.

இந்நிலையில் சென்னை புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மேலும் அவருக்கு சிறுநீரகத் தொற்று இருக்கும் நிலையில் இது தொடா்பாகவும் பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி