ஆப்நகரம்

பெரியார் சிலையை அகற்றுவோம்: அர்ஜூன் சம்பத் முழக்கம்

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று முழக்கமிட்ட சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 21 Mar 2016, 3:31 pm
திருச்சி: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று முழக்கமிட்ட சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil periyar statue should be removed arjun sampath
பெரியார் சிலையை அகற்றுவோம்: அர்ஜூன் சம்பத் முழக்கம்


திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று ஆஜராகினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சியில் நடைபெற்ற சமுக நீதி மாநாட்டில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க தலைவர் வீரமணி மீது தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் சாதி வெறிக் கொலைகளுக்கு பெரியாரும் , அண்ணாவும் தான் காரணம். பெரியார் சிலை வைப்பதை சட்டப்படி தடுப்போம் . மேலும் வரும் 25 ம் தேதி காலை 10.30 - 11 மணி வரை தமிழகம் முழுவதும் பாரத் மாதாகி ஜே, வந்தே மாதரம் முழக்கம் மற்றும் பாரத மாதா வழிபாடும் நடத்தப்படும்.

இதனிடையே அங்கு வந்த வழக்கறிஞர் கென்னடி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்

இதனால் இருதரப்பினர்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல் உதவி ஆணையர் அசோக்குமார் மற்றும் போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

அடுத்த செய்தி