ஆப்நகரம்

தமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு: இதற்கெல்லாம் அனுமதி!

தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Aug 2020, 9:33 am
கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அன்லாக் 3 அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மேலும் சில தளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil driving schools worship places


ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அடுத்த கட்ட பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 10,000 ரூபாய்க்கு கீழ் மாத வருமானம் வரும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மாநகராட்சிப் பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? மத்திய அரசு முடிவு இதுதானாம்!

டாஸ்மாக் கடைகளை திறந்து லாபம் பார்க்கும் அரசு கோயில்களைத் திறக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது மாநகராட்சிப் பகுதிகளிலும் சிறிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இயங்கவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி