ஆப்நகரம்

கொடைக்கானல் அழகை ரசிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் ஹேப்பி!

ஊரடங்கில் முடங்கிக் கிடந்த மக்கள் கொடைக்கானல் பகுதியின் அழகை கண்டு ரசிக்க செல்கின்றனர்.

Samayam Tamil 29 Aug 2020, 7:59 am
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த கட்ட பொது முடக்க அறிவிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil kodaikanal


மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டபின்னர் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளார்.

இ பாஸ் முழுவதும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் சில தளர்வுகளை மட்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துக்கு அனுமதி, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்தல், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்திவருகின்றர். இது தொடர்பாக அரசு இன்று அறிவிப்பை வெளியிடவுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த கட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடர்ந்து வரும் நிலையில் அடுத்தகட்ட பொது முடக்கத்திலும் அதற்கு அனுமதியளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கொடைக்கானல் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இருப்பினும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கை அழகை ரசிக்க செல்பவர்கள் மாலையே ஊர் திரும்பும் நிலை உள்ளது.

எப்படி உருவானது வசந்த் அண்ட் கோ? வசந்தகுமார் கடந்த வந்த பாதை!

ஐந்து மாதங்களுக்கும் மேலாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் நிலையில் சுத்தமான காற்றை சுவாசிப்பதும், இயற்கை அழகை கண்டு களிப்பதும் புத்துணர்வூட்டக்கூடியது என்பதால் கொடைக்கானல் மலைக்கு சத்தமில்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர்.

அடுத்த செய்தி