ஆப்நகரம்

தமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

இரும்பு, உரம், சிமெண்ட், மற்றும் ரசாயனம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.

Samayam Tamil 7 Apr 2020, 7:26 pm
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் சில தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களான காய் கறிகள், பால், மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் அதனை சார்ந்த நிலையங்கள் தவிர அனைத்து விதமான பெரிய, சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
Samayam Tamil தமிழகத்தில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்த்து வருவதால், வைரஸ் முன்றாவது கட்டத்தை எட்டுவிடக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளால் தமிழக அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வரி தடையாகியுள்ளதால் பொருளாதார ரீதியாக அரசு பாதிப்பையும் சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் 7 பேர் பலி..! இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா...

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலாகிய நாளிலிருந்து முதன்முறையாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயல்பட உத்தரவிட்டுள்ளது. அதன்படி சர்க்கரை, கண்ணாடி, காகித ஆலைகள், சிமெண்ட், இரும்பு, உரம் உள்ளிட்ட தமிழகத்தில் செயல்பட்டு வரும் 12 தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி