ஆப்நகரம்

பிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள் : தமிழிசை சவுந்தரராஜன்!

ரயில்வே திட்டங்கள் மேம்பால திட்டங்கள் போன்ற நல்ல திட்டங்களை துவக்கி வைக்க தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 2:07 pm

ஹைலைட்ஸ்:

  • எங்களது கூட்டணி வெற்றிக்கான கூட்டணி எனவே புதிய கூட்டணிகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று அவர் கூறிய அவர் மத்திய மாநில அரசுகளின் நல்ல திட்டங்களை எடுத்து வைத்து மக்களிடம் வாக்கு கேட்கும் எந்த மதம் சார்ந்த கருத்துக்களை நாங்கள் இதுவரை சொல்லவில்லை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
ரயில்வே திட்டங்கள் மேம்பால திட்டங்கள் போன்ற நல்ல திட்டங்களை துவக்கி வைக்க தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமரை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் மரியாதை இழப்பார்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்த அவர் வரும் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார் இது கூட்டணி கட்சிகள் உடைய பரப்புரையாக அமையும் என்று அவர் கூறினார்.

எங்களது கூட்டணி வெற்றிக்கான கூட்டணி எனவே புதிய கூட்டணிகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று அவர் கூறிய அவர் மத்திய மாநில அரசுகளின் நல்ல திட்டங்களை எடுத்து வைத்து மக்களிடம் வாக்கு கேட்கும் எந்த மதம் சார்ந்த கருத்துக்களை நாங்கள் இதுவரை சொல்லவில்லை எனவே எதிர் அணியில் உள்ளவர்களால் மதம் சார்ந்த கட்சிகளோடு கூட்டணியை அமைத்து உள்ளனர் என்று அவர் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கிராமசபை கூட்டங்களை கூட்டுகிறது எப்படி மக்களை பேசவைத்து நாடகமாடுகிறது என்பது எங்களுக்கும் தெரியும் அது மக்களுக்கு தெரியும் என்று அவர் குறை கூறிய அவர் நாங்கள் தொடர்ந்து நாள்தோறும் மக்களை சந்தித்து வருகிறோம் எனவே மக்களுக்கு எங்களை பற்றி நன்றாக தெரியும் என்று அவர் கூறினார் மக்கள் பணியாற்றி வருகிறோம் என்று கூறிய அவர் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது அப்படி தேர்தல் வந்தால் அதில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் அவர்களுக்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை செய்து கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டவர், நேர்மையான அரசியல் மக்கள் நலத்திட்டங்கள் வலிமையான மத்திய அரசு மாநில அரசு திட்டங்கள் போன்றவற்றில் அதனுடைய சாதனைகளையும் எடுத்துக் கூறி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ள கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி