ஆப்நகரம்

Cyclone Pethai: தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம்

பெதாய் புயல் இன்று கரையை கடப்பதை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2018, 1:30 pm
பெதாய் புயல் இன்று கரையை கடப்பதை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேயில் அடுத்த மூன்று நாட்களுக்குவறண்ட வானிலைநிலவும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil kak


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதியில்நிலவி வரும் பெதாய் புயல் தொடர்ந்துவடக்குநோக்கி நகர்ந்துஆந்திர மாநிலம்காக்கிநாடா அருகேபிற்பகல் கரையைகடக்கும். தற்போது பெதாய் புயலானது காக்கி நாடாவுக்கு தெற்கே 130 கிலோமிட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதனால் மீனவர்கள் இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வழக்கமான அளவை விட வெப்பம் 4 சதவீதம் குறைவாகவே உள்ளது’’என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி