ஆப்நகரம்

சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பொதுநல வழக்கு..!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி,மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNN 21 Feb 2017, 9:59 pm
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி,மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pil in madras hc seeks fresh trust vote in tamil nadu assembly
சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பொதுநல வழக்கு..!

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தாமரைக் கனியின் மகனான டி.ஆணழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,”கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.ஆனால் ரகசிய வாக்கெடுப்பானது நடத்தப்படவில்லை.

அதிமுகவைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் பத்து நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இதன் காரணமாக சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலையில் எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.மேலும் தங்கள் தொகுதி மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கலாமா? என எம்.எல்.ஏக்கள் கருத்து கேட்டிருக்க வேண்டும்.

மேலும் அனைத்து வகையான தேர்தல்களிலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது நடைமுறையில் உள்ளது.எனவே மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டமன்றத்தில் நடத்த சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

PIL in Madras HC seeks fresh trust vote in Tamil Nadu assembly

அடுத்த செய்தி