ஆப்நகரம்

தமிழக முதல்வர் ஜெ.,-வை சந்திக்கும் பியூஷ் கோயல்?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 13 Jul 2016, 3:33 pm
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil piyush goel likely to meet tn cm jayalalitha
தமிழக முதல்வர் ஜெ.,-வை சந்திக்கும் பியூஷ் கோயல்?


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை என மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தமிழகம் முழுவதும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து, அதிமுக அரசு சார்பில் பதில் அறிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாளை மறுநாள் சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சாரம், உதய் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அந்த சந்திப்பின் போது இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையொப்பமிடாத நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி