ஆப்நகரம்

இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 May 2018, 11:08 am
சென்னை: தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை முடக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 11_MADRAS_HIGH_COURT_VG


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி, குமரி, நெல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் அவரச வழக்காக இன்று மதியம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி