ஆப்நகரம்

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்; தமிழக அரசின் அடுத்த அதிரடி

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 22 May 2017, 2:35 pm
சென்னை: பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil plus 2 exam pattern changes from coming academic year
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்; தமிழக அரசின் அடுத்த அதிரடி


தமிழக கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி அறிவிப்பில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்தார். அது இரு தேர்வு முடிவுகளின் போதும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிளஸ் 1 வகுப்பில் தவறினால் அந்த பாடங்களை பிளஸ் 2வில் எழுதவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் பிளஸ் 1 , பிளஸ் 2 ஆகிய இரண்டு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் சேர்த்து சராசரி கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வழங்கப்படும் 200 மதிப்பெண்களை 100 மதிப்பெண்களாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தேர்வு நேரமும் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்னும் சில நாட்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Plus 2 Exam pattern changes from coming academic year.

அடுத்த செய்தி