ஆப்நகரம்

கிசான் திட்ட மோசடி: 101 பேரை கைது செய்த சிபிசிஐடி!

கிசான் திட்ட மோசடி தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 9:19 am
பிரதமரின் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையில் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் விவசாயிகள் அல்லாதவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு பயனடைந்ததாக புகார்கள் எழுந்தன.
Samayam Tamil kisan scheme scam


ஆரம்பத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இந்த மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இத்திட்டத்தில் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தமிழக பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

இடைத்தரகர்கள், அதிகாரிகள் என பலர் இந்த மெகா முறைகேட்டின் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. சிபிசிஐடி போலீஸார் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 மாசத்துக்கு பின் ஹேப்பி நியூஸ்; தமிழக மக்களுக்கு இனி ஜாலி பயணம்!

முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி