ஆப்நகரம்

PM Modi : எய்ம்ஸ் மருத்துவமனை - அடிக்கல் நாட்ட வருகிறார் மோடி - வரவேற்பு கிடைக்குமா?

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jun 2018, 1:10 am
சென்னை : மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil modi


தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழிசை பேசியதாவது:
மதுரையின் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள தோப்பூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) அமைய உள்ளது என மத்திய அரசு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மிகுந்த பயன் பெறும்.

இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பாஜக அரசு தமிழக நலனில் அக்கறை காட்டி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக பொது விளக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

மோடிக்கு எதிர்ப்பு

சில மாதங்களுக்கு முன் சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சியை திறந்து வைக்க வந்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது என “Go Back Modi” என்ற வாசகத்துடன் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த வாசகம் உலகளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

தற்போது மதுரை வர உள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு வருமா?, வரவேற்பு கிடைக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி