ஆப்நகரம்

ஈஷா மைய 112 அடி சிவன் சிலை திறப்பு விழா: கோவை வருகிறார் பிரதமர் மோடி

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார்.

TNN 23 Feb 2017, 10:36 am
கோவை: ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார்.
Samayam Tamil pm modi opens lord shiva statue of isha yoga foundation in coimbatore
ஈஷா மைய 112 அடி சிவன் சிலை திறப்பு விழா: கோவை வருகிறார் பிரதமர் மோடி


கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் ஈஷா யோகா மையத்தின் ஆசிரமம் உள்ளது. அங்கு 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவனின் முகத் தோற்றத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நாளை திறப்பு மற்றும் சிறப்பு அபிஷேக விழா நடைபெறவுள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முக்கிய அரசியல் தலைவர்கள் நாளை கோவை வருவதை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மாலை 5.20 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். முன்னதாக வனப்பகுதிகளை முறைகேடாக ஆக்கிரமித்து, ஆசிரமம் அமைத்ததாக கூறி, பிரதமர் விழாவை புறக்கணிக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

PM Modi opens Lord Shiva statue of Isha Yoga foundation in Coimbatore.

அடுத்த செய்தி