ஆப்நகரம்

நிவர் பாதிப்பு: முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி - நிவாரணம் அறிவிப்பு!

நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி.

Samayam Tamil 27 Nov 2020, 10:45 pm

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நவம்பர் 25ஆம் தேதியன்று அதிதீவிர புயலாக மாறி நவம்பர் 26 அதிகாலையில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், வாழை, கரும்பு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் சேதமடைந்தன.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி - மோடி


இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு 9 மணியளவில் தொடர்புகொண்டு நிவர் புயல் பாதிப்பு மற்றும் மழையால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து கேட்டறிந்தார். மேலும், புயலால் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.

நிவர் புயல்: இழப்பீடு தொகை அறிவிப்பு!

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக மத்திய குழுக்கள் தமிழகத்துக்கு அனுப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில், “மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 9:00 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிவர் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.


அடுத்த செய்தி