ஆப்நகரம்

மோடிகிட்ட வீடியோவில் பழனிசாமி கேட்டது என்ன?

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளது...

Samayam Tamil 11 Apr 2020, 11:04 pm
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 7 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இன்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 773 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதற்கிடையே பல்வேறு மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசு நிலைமையைக் கட்டுக்குள் வைக்க ஊரடங்கை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி மோடியிடம் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளார். நமக்குக் கிடைத்த தகவலின்படி, என்-95 மாஸ்க், பாதுகாப்பு கவசங்கள் உள்பட பல்வேறு உபகரணங்கள் வாங்குவதற்கு உடனடியாக ரூ. 3 ஆயிரம் கோடி வேண்டும் என முதல்வர் பழனிசாமி, மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களான பருப்பு, அரிசி உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கச் சரக்கு ரயில் போக்குவரத்து, லாரி சேவைகள் தடையின்றி இயங்க வழி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் முதல்வர்..! எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்

இதுகுறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, ஆலோசனை நடத்தி அதன்பின் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்த வீடியோ மீட்டிங்கின்போது பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இந்த மீட்டிங்கிற்கு முன் பிரதமர் மோடி முதற்கட்டமாக ரூ. 510 கோடியைத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்குத் தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிப்பு குறித்து பிரதமர் அலுவலகங்களிலிருந்து தகவல் வெளியானபின் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது. மேலும், ஊரடங்கை நீடிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட போதிய அவகாசம் இருப்பதாகவும் அந்த தகவலின்போது கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி