ஆப்நகரம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு? அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 19 Nov 2022, 2:26 pm
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
Samayam Tamil anbumani ramadoss


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய தேதிகளில் தலா 15% வீதம் மொத்தம் 30% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் படி ரூ.1500-லிருந்து 100% உயர்த்தி ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் எந்தெந்த பகுதிகளில் எப்போது மழை? வெதர்மேன் கொடுத்த விளக்கம்!

ஆனால், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வும், பிற படிகள் உயர்வும் வழங்கப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் இரு பிரிவினரை பாகுபாட்டுடன் நடத்துவது நியாயமல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு - ஸ்டாலின் தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி
பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி ஆணையும், ஊதிய உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி