ஆப்நகரம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: பாமக புறக்கணிப்பு

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கனிப்பதாக பாமக அறிவித்துள்ளது.

TNN 5 Nov 2016, 2:24 pm
மதுரை: சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கனிப்பதாக பாமக அறிவித்துள்ளது.
Samayam Tamil pmk boycott thiruparankundram by election
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: பாமக புறக்கணிப்பு


கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் நிலவியது. இதனிடையே, தேர்தல் ரத்தான இரண்டு தொகுதிகள் உள்பட மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் தாக்கல்கள் முடிவடைந்து பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக-வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கட்சியின் சின்னம் கோரி வழங்கப்பட்ட மனு தாமதமாகத் தரப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், போட்டியில் இருந்து பாமக வேட்பாளர் செல்வம் விலகினார். அதேசமயம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கனிப்பதாவும் பாமக அறிவித்துள்ளது.

முன்னதாக, தேர்தல் முறையாக நடக்காது என்று கூறி, புதுவை நெல்லித் தோப்பு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
PMK boycott Thiruparankundram By Election

அடுத்த செய்தி