ஆப்நகரம்

வணிக வரித்துறையினருக்கு பதவி உயர்வு: அன்பு மணி ராமதாஸ் கோரிக்கை!

பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் வணிகவரித் துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 8 Mar 2023, 1:52 pm
வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித் துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Samayam Tamil anbumani ramadoss


அன்புமணி கோரிக்கை!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வணிகவரித் துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது. வணிகவரித் துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை.
பாஜக டூ அதிமுக: மீண்டும் எடப்பாடியை தேடி வரும் பாஜக நிர்வாகிகள்!
வணிக வரித்துறைக்கு மட்டும் பாரபட்சம்!

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித் துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி