ஆப்நகரம்

விரைந்து தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை!!

''வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 May 2020, 3:07 pm
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள். முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர்கள் இருவருக்கும் ஜெயபால் என்பவருடன் முன் பகை இருந்துள்ளது.
Samayam Tamil பாமக ராமதாஸ்


இந்த நிலையில் ஜெயபாலின் மகளின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்துள்ளனர். இதன் பின்னர் அவரது தலையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில், உடல் முழுவதும் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ''ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

''ஜெயஸ்ரீயை'' எரித்துக் கொன்ற அதிமுகவினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!

அடுத்த செய்தி