ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்துக்கு மாமல்லன் பெயர்: ராமதாஸ் வைத்த கோரிக்கை!

பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சென்னை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Apr 2023, 3:00 pm
சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னர் மாமல்லன் பெயர் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil chennai airport


விமான நிலையங்களின் முனையங்களுக்கு தனித்தனியாக பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப் பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
கருப்பு முகக் கவசம் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்: என்ன காரணம்?
விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
டெல்லியில் மாஸ் காட்டும் எல்.முருகன்: மோடி, நட்டாவை வீட்டுக்கு அழைத்து விருந்து!
விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி