ஆப்நகரம்

ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை; தேவதாசி வார்த்தைக்கு வைரமுத்து விளக்கம்!

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே எனது நோக்கம் என்று கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 13 Jan 2018, 10:07 pm
ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே எனது நோக்கம் என்று கவிஞர் வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.
Samayam Tamil poet vairamuthu explains about aandaal and devadasi
ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை; தேவதாசி வார்த்தைக்கு வைரமுத்து விளக்கம்!


கடந்த 7ம் தேதி ஆண்டாள் கருத்தரங்கில் பேசிய வைரமுத்து தேவதாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பேசினார். கடும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர் மீது காவல்துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே தனது நோக்கம் என்று தேவதாசி வார்த்தைக்கு விளக்கமளித்துள்ளார்.
ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே நோக்கம்.. pic.twitter.com/w9aC7Cbc9e — வைரமுத்து (@vairamuthu) January 13, 2018 இது குறித்து அவர் கூறுகையில், ஆண்டாள் காலத்தில் தேவதாசி என்பவள் மிகமிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை என்று தெரிவித்துள்ளார். கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக் கொண்ட உயர்ந்த பெண்களுக்கே தேரவடியார் அல்லது தேவதாசி என்று அழைக்கப்பட்டதாகவும், பிற்காளத்தில், சமூகத்தால் பொருள் மாற்றம் பெற்றுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த செய்தி