ஆப்நகரம்

பிரதமரை பாராட்டி பொன்னாருக்கு பதில் சொன்னாரா வைரமுத்து?

ஐநா சபையில் பிரதமர் நரேந்திர மோடி கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேற்கோள்காட்டி பேசியதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Sep 2019, 2:10 pm
ஐ.நா.சபையின் 74 ஆவது பொதுக் குழு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “3,000 ஆண்டுகளுக்கு முன், கணியன் பூங்குன்றனார் எனும் மகாகவி, பழமையான சிறப்புமிக்க தமிழ்மொழியில் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என கூறியுள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலக மக்கள் அனைவரும் தம்முடைய சொந்தங்கள் என கருதிய உயர்வான பண்பாட்டை இந்தியா கொண்டிருந்தது என்பதற்கு இந்த வரிகளே சான்று” என்று பேசினார்.
Samayam Tamil பிரதமரை பாராட்டி பொன்னாருக்கு பதில் சொன்னாரா வைரமுத்து


உலகத்துக்கு புத்தரை பரிசா தந்தவங்க நாங்க...பயங்கரவாதத்துக்கு எதிரா பேசமாட்டோமா என்ன? ... ஐ.நா.வில் மோடி பெருமிதம்!

இது குறித்து கவிஞர் வைரமுத்து, “ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே, தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக மோடி தமிழ் மொழி குறித்து பேசிய போது யாரும் பாராட்டவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்று விமர்சித்திருந்தார். “பிரதமர் மோடி தமிழ் மொழி பழமையானது என்று பேசினார். இதற்கு முன் எந்த பிரதமரும் அப்படி பேசியதில்லை. தமிழ் மீது நமக்கு உண்மையில் பற்று இருக்குமேயானால் அதை தமிழகம் ஆண்டு முழுக்க கொண்டாடியிருக்க வேண்டும். இதைவிட கௌரவம் யார் கொடுக்க முடியும்? இதை கொண்டாடத் தெரியாதவன் தமிழன், நன்றி மறந்தவன் தமிழன்” என்று பேசியிருந்தார்.

என்னது, இந்தியா திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடா? உண்மை என்ன தெரியுமா மோடிஜி?

பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சு அப்போது சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது ஐநாவில் பேசிய பிரதமரின் கருத்துக்கு வைரமுத்து உடனடியாக பாராட்டு தெரிவித்துள்ளது பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்த பதிலாக பார்க்கப்படுகிறது. அதிலும் பிரதமரின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்த வைரமுத்து, ‘தாயகத்தில் தமிழை உயர்த்தினால் நாங்களாகவே நன்றி சொல்வோம்’ என்று குறிப்பிட்டதை சமூகவலைதள வாசிகள் அடிக்கோடிட்டுள்ளனர்.

மேலும் பிரதமரின் இந்த பேச்சு குறித்து மீம்ஸ்களும் பதிவுகளும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. “இந்தி படித்தால் தான் வேலைன்னு எங்களை சொல்லிட்டு... நீங்க தமிழ் கத்துகிட்டு இருக்கிங்க...” என்பதாக அந்தப் பதிவுகள் அமைந்துள்ளன.

அடுத்த செய்தி