ஆப்நகரம்

குடியாத்தத்தில் சமூக நலத்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

வேலூரில் சமூக நலத்துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 10 Feb 2019, 4:24 pm
வேலூரில் சமூக நலத்துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூகநலத்துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது

இதில் அவ்வலுவலகத்தில் உள்ளவர்கள் முறைகேடாக பணம் பெற்றுகொண்டு தான் காசோலைகள் வழங்குவதாகவும் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறுவதாகவும் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறைக்கு புகார்கள் கிடைத்தது இதன் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் இன்று 28 பேருக்கு திருமண நிதியுதவியை அளிப்பதற்காக அழைத்தனர்

இதில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் வட்டார சமூக நல அலுவலர் சாவித்திரியிடம் கணக்கில் வராத பணம் ரூ.28 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் அவ்வலுவகலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிதியுதவி பெற வந்தவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி