ஆப்நகரம்

போலீசுக்கே டஃப் கொடுத்த வாகன ஓட்டி..! கொரோனா பீதியில் ஓர் சுவாரசியம்...

கொரானா பரபரப்பில் திருவாடானையிலிருந்து இரு சக்கர வாகனத்திலேயே சென்னை செல்வதாக கூறிய நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

Samayam Tamil 28 Mar 2020, 4:58 pm
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை காவல் துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து மூடப் பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்ததையடுத்து அவரை விசாரித்த காவல் துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
Samayam Tamil போலீசுக்கே டஃப் கொடுத்த வாகன ஓட்டி


இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் பெயர் ராஜா (55). இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது வாகனத்தில் கொரனோ வைரஸ் பரவாமல் இருக்க வாகனத்தின் நான்கு பக்கங்களிளும் வேப்பிலை கட்டியிருந்தார். அவரை விசாரித்ததில், இவர் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தேவிப்பட்டினம் கடற்கரைக்கு நேற்று வெள்ளி கிழமை இரவு வந்துள்ளார்.

தர்ப்பணம் முடித்து இன்று மீண்டும் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்னைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வேப்பிலைகளை கட்டி வைத்திருந்தார்.

மேலும் வண்டியில் மஞ்சள் கரைத்த தண்ணீரை வண்டி ஆங்காங்கே நிறுத்தும் இடங்களில் தெளிப்பதற்காக வைத்திருப்பதாகவும் கூறினார். தனது இருசக்கர வாகனத்தில் அவர் மீண்டும் சென்னை செல்வதாக கூறியதும் அங்கிருந்த காவலர்கள் மற்றும் அலுவலர்கள் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.

அகதிகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? இதைச் செய்யுங்கள் - சீமான் கோரிக்கை

அவருடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்த்த போலீசார் செய்வது அறியாமல் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அடுத்த செய்தி